மஸ்கெலியா சாமிமலை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குடிநீர் குழாய் செப்பனிடச் சென்ற போது அவர் இன்று பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஹொரணை பெருந்தோட்டத்துக்குட்பட்ட ஓல்ட்டன் தோட்டம் கிங்கோரா பிரிவைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.