மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியாவின் முதல் தவணை!

மஹவ – அநுராதபுரம் ரயில் பதையில் மேம்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பு நிறுவுவதற்கான முதல் தவணையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தத் தவணைத் தொகை சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் (770 மில்லியன் ரூபா).

இந்த திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்க முன்மொழிந்திருந்தாலும், 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதியின் இந்தியாவிற்கு அரச முறைப் பயணத்தின்போது இது மானியமாக மாற்றப்பட்டது.

இது இந்திய பொதுத்துறை நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தண்டவாளங்களில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் ரயில் செல்லும் வகையில் வடக்குப் பதை இதன் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேம்பட்ட சமிக்ஞை அமைப்பு பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, ரயில் சேவைகளின் அதிர்வெண் மற்றும் செயல்திறனையும் அதிகரிக்கும்.

இலங்கையில் பல ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது.

இலங்கையின் ரயில்வே துறைக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த நிதி உதவி சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

நன்றி

Leave a Reply