மஹிபால ஹேரத்திற்கு சொந்தமான ஹோட்டல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

அனுராதபுரம் – பெரமியங்கும் வனப்பகுதியில் முன்னாள் வடமத்திய மாகாண ஆளுனர் மஹிபால ஹேரத்திற்கு சொந்தமான ஹோட்டல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டல் அவரது மனைவியின் பெயரில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டது.

கட்டிடத்தை ஒரு மாதத்திற்குள் இடிக்குமாறு பிரதேச செயலாளர் கடந்த மாதம் 18 ஆம் திகதி கடிதமொன்றின் ஊடாக அறிவித்திருந்தார்.

குறிப்பிட்ட காலத்தில் கட்டிடம் இடிக்கப்படாவிட்டால், அதனை அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மஹிபால ஹேரத் கட்டிடத்தை இடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

நன்றி

Leave a Reply