மின் கட்டணத் திருத்தத்தில் நிலக்கரி நெருக்கடியால் ஏற்படும் செலவுகள் கருத்திற்கொள்ளப்படாது – PUCSL

இலங்கையில் மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

அண்மைய மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தின் போது, நிலக்கரி நிலைமை காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது வேறு ஏதேனும் நியாயமற்ற செலவுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்கால மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளிலிருந்தும் நிலக்கரி நெருக்கடி தொடர்பான மேலதிக செலவுகள் அல்லது ஏனைய நியாயமற்ற செலவுகளை நீக்குவதற்கு ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

Post Views: 7

நன்றி

Leave a Reply