முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் இன்று (23) முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவிலிருந்து 110 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து ஒவ்வொரு கூடுதல் கிலோமீற்றருக்குமான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து ஒவ்வொரு கூடுதல் கிலோமீற்றருக்குமான கட்டணம் 80 ரூபாவாக காணப்பட்டது.
பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் எரிபொருள் விலை உயர்வு தாக்கம் செலுத்துவதால் அவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்தக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Views: 14
