முடிவெட்ட சென்ற சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சிலாபம் சிகையலங்கார நிலையமொன்றில் சிறுவன் ஒருவன் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 “109” என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சிகையலங்கார நிலையத்திற்கு முடி திருத்துவதற்காக வந்த சிறுவன் மீது இந்த துஷ்பிரயோக முயற்சி கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 54 மற்றும் 58 வயதுடைய கக்கப்பள்ளிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் (22) சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

நன்றி

Leave a Reply