முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு! உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு!

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் காவற்துறை பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 07ஆம் திகதி இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த 32வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் (09.08.25) முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

நீதவானின் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் காவற்துறையினரால் தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டது.

யாழ் போதனா வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மரணத்திற்கான தெளிவான காரணம் குறிப்பிடப்படாமல் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் மேலதிக பகுப்பாய்வுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளது.

The post முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு! உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply