முஸ்லிம்களுக்கு எதிரான திகன வன்முறை – நீண்­ட­கா­லத்தின் பின் 60 பக்க விசா­ரணை அறிக்கை

(நா.தனுஜா)


2018 ஆம் ஆண்டு திக­னவில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக அரங்­கேற்­றப்­பட்ட வன்­மு­றைகள், அப்­ப­கு­தியில் பதி­வான உள்­ளகக் குழப்­பத்­துக்­கான உள்­ளுர்­வா­சி­களின் உட­னடித் துலங்கல் என்­ப­தற்கு அப்பால், முன்­கூட்­டியே திட்­ட­மி­டப்­பட்டு நிகழ்த்­தப்­பட்ட வன்­மு­றைத்­தாக்­கு­தல்கள் என கடந்த வாரம் வெளி­யி­டப்­பட்ட அச்­சம்­பவம் தொடர்­பான இலங்கை மனித உரிகைள் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

‘திகன கல­வரம்’ என அறி­யப்­படும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தொடர் வன்­மு­றைகள் 2018 பெப்­ர­வரி 26 ஆம் திகதி அம்­பாறை நகரில் ஆரம்­ப­மாகி, அவை மார்ச் 2 ஆம் திக­தி­ய­ளவில் கண்டி மாவட்­டத்­துக்குப் பர­வ­ல­டைந்­தன. இதன்­போது முஸ்­லிம்­க­ளையும், அவர்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மற்றும் வீடு­க­ளையும், பள்­ளி­வா­சல்­க­ளையும் இலக்­கு­வைத்துத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­துடன் வன்­மு­றை­களும் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன. இச்­சம்­பவம் தொடர்­பான இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் 60 பக்க விசா­ரணை அறிக்கை பல்­வேறு தரப்­பி­ன­ரதும் அழுத்­தங்­களைத் தொடர்ந்து, நீண்­ட­கா­லத்தின் பின்னர் கடந்த முதலாம் திகதி வெளி­யி­டப்­பட்­டது.

திகன வன்­மு­றை­களின் பின்­னணி, அச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து திரட்­டப்­பட்ட வாக்­கு­மூ­லங்கள், அவ்­வன்­மு­றை­களால் ஏற்­பட்ட இழப்­புக்கள் மற்றும் பாதிப்­புக்கள், அச்­சம்­பவம் தொடர்­பான அவ­தா­னிப்­புக்கள் மற்றும் இத்­த­கைய இன­ரீ­தி­யான வன்­மு­றை­களைத் தடுப்­ப­தற்­கான பரிந்­து­ரைகள் என்­பன அவ்­வ­றிக்­கையில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன.

அவ்­வ­றிக்­கையில் எச்.ஜி.குமா­ர­சிங்க எனும் பெய­ரு­டைய நபரைத் தாக்­கி­ய­தாக சந்­தே­கிக்­கப்­பட்ட நபர் சட்­டத்தின் பிர­காரம் தெல்­தெ­னிய பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்­ட­தா­கவும், இருப்­பினும் அந்­நபர் கைது­செய்­யப்­ப­ட­வில்லை என குறித்­த­வொரு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட குழு­வி­னரால் பரப்­பப்­பட்ட போலித்­த­க­வல்­களே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் தீவி­ர­ம­டை­வ­தற்கு வழி­கோ­லி­ய­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை பொலிஸார் மற்றும் விசேட அதி­ர­டிப்­படை அதி­கா­ரி­களில் சிலர் இவ்­வன்­மு­றைத்­தாக்­கு­தல்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய போதிலும், ஒட்­டு­மொத்த அதி­கா­ரி­களும் அதனை ஊக்­கு­விக்கும் வகையில் செயற்­ப­ட­வில்லை என ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­துடன் புல­னாய்­வுப்­பி­ரிவின் பங்­கேற்பு, வளங்கள், பாது­காப்­புத்­த­ரப்பு உறுப்­பி­னர்­களின் போதாமை கார­ண­மா­கவே வன்­மு­றை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் தோல்வி ஏற்­பட்­ட­தா­கவும், ஆகை­யி­னா­லேயே சட்டம், ஒழுங்கை நிலை­நாட்­டு­வ­தற்கு இரா­ணு­வத்­தி­னரின் தலை­யீட்டைக் கோர­வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தா­கவும் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

‘இலங்­கையில் முஸ்லிம் சமூ­கத்­தி­னரை இலக்­கு­வைத்து தாக்­கு­தல்கள் நடாத்­தப்­படும் கட்­ட­மைக்­கப்­பட்ட வடி­வத்­தினுள் திகன சம்­பவம் பொருந்­து­கின்­றது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் கிந்­தோட்டை மற்றும் அம்­பா­றை­யிலும் 1915 ஆம் ஆண்­ட­ளவில் வேறு சந்­தர்ப்­பங்­க­ளிலும் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன. மத­ரீ­தி­யான செயற்­பா­டுகள் தொடர்பில் மட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டமை, கொவிட் – 19 வைரஸ் பெருந்­தொற்­றுப்­ப­ர­வ­லினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் உடல்கள் கட்­டா­யத்­த­கனம் செய்­யப்­பட்­டமை மற்றும் பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்­தின்கீழ் சிலர் நீண்­ட­ காலம் தடுத்­து­வைக்­கப்­பட்­டமை போன்ற நட­வ­டிக்­கைகள் மற்றும் ஒடுக்­கு­முறைக் கொள்­கைகள் என்­பன கடும்­போக்­கு­வா­தக்­கு­ழுக்­களால் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய ஒரு விரோத சூழ்­நி­லையைத் தோற்­று­வித்­துள்­ளன’ என மனித உரி­மைகள் ஆணைக்­குழு அதன் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இந்­நி­லையில் எதிர்­வ­ருங்­கா­லங்­களில் இவ்­வாறு குறித்­த­வொரு இனக்­கு­ழு­மத்தை இலக்­கு­வைத்து வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­ப­டு­வதைத் தடுக்கும் வகையில் 11 அமைச்­சுக்கள் மற்றும் திணைக்­க­ளங்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்த பரிந்­து­ரை­களை ஆணைக்­குழு அதன் அறிக்­கையில் உள்­ள­டக்­கி­யுள்­ளது.

அதன்­படி புல­னாய்­வுத்­த­கவல் திரட்­டலை வலுப்­ப­டுத்தல், இனக்­க­ல­வ­ரங்­களை உட­ன­டி­யாகத் தடுப்­ப­தற்­கான கட்­ட­மைப்பை உரு­வாக்கல், பொலி­ஸாரின் பங்­கேற்­புடன் மாதாந்தம் சிவில் குழுக்­கூட்­டங்­களை நடாத்­துதல் என்­ப­வற்­றுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று பிரி­வி­னை­வாத மற்றும் கடும்­போக்­கு­வாத நோக்­கங்கள் மற்றும் செயற்­பா­டு­களைத் தடுக்கும் வகையில் அமைப்­புக்­களைப் பதி­வு­செய்­வ­தற்கு சமூ­க­சே­வைகள் மற்றும் நலன்கள் அமைச்சும், தேசிய நல்­லி­ணக்கம் மற்றும் ஒரு­மைப்­பாட்டை பாட­சா­லைக் ­கல்­விப் ­பா­ட­வி­தா­னத்தில் கட்­டாய பாட­மாக உள்­வாங்­குதல், இன மற்றும் மத ரீதியில் தனித்­த­னி­யாகப் பாட­சா­லைகள் நடாத்­தப்­ப­டு­வதை முடி­வு­றுத்தல், மனித உரி­மைகள் மற்றும் சிவில் கோட்­பா­டு­களை வலுப்­ப­டுத்­தக்­கூ­டிய பாடத்­திட்­டத்தை உட்­சேர்த்தல் என்­ப­வற்­றுக்கு கல்­வி­ய­மைச்சும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வேண்டும் எனப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அது மாத்திரமன்றி சட்ட அமுலாக்க அதிகாரிகளின் தவறான செயற்பாடுகள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல், பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் சட்டவிரோத தாக்குதல்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவதற்கு ஏதுவாக வலுவான சட்ட மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு அரச அதிகாரிகளால் இழைக்கப்படும் மிகமோசமான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பிரத்தியேக சுயாதீன அலுவலகமொன்றை ஸ்தாபிக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. – Vidivelli

நன்றி

Leave a Reply