மு.க.ஸ்டாலினை சந்தித் சுந்தரலிங்கம் பிரதீப் – Oruvan.com

தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும், தமிழக அரசுக்கும் இதன்போது பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

மலையக மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இதன்போது பிரதி அமைச்சரிடம் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

.

நன்றி

Leave a Reply