மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேற்கு கரையில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன். இஸ்ரேல் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கமுடியாது. இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
காசா முனை மற்றும் மேற்கு கரை என இரு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. அதேவேளை, மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இதனிடையே, மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக பல்வேறு நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனாலும், பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகளை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.