68
அன்னை பூபதியின் 38வது நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பமானது. அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியது.இந்த ஊர்தியானது தமிழர் தாயகத்தை வலம்வந்து மட்டக்களப்பிலிருக்கும் அன்னை பூபதி நினைவிடத்தை சென்றடையும்.
இந்திய அரசாங்கத்திடம் உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும் மற்றும் புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும் என்ற இரண்டு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளரான அன்னை பூபதி என அழைக்கப்படும் பூபதி கணபதிப்பிள்ளை மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக 1988 மார்ச் 19ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து 1988 ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்தார்.

#AnnaiPoopathy #RemembranceDay #JaffnaToBatticaloa #NonViolentProtest #TamilHistory
