யாழ்ப்பாணத்தில் இளம் சட்டத்தரணி ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்வாய் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சிவராசா நிகாஷ் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குடும்பத்தினர் அவரை உடனடியாக பருத்தித்துறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#JaffnaNews #PointPedro #SuddenDemise #LawyerLife #Heartattack #யாழ்ப்பாணம் #அல்வாய் #சிவராசா_நிகாஷ் #மாரடைப்பு
The post யாழ்ப்பாணத்தில் இளம் சட்டத்தரணி மாரடைப்பால் உயிரிழப்பு appeared first on Global Tamil News.
