இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இன்று (08) தெரிவித்துள்ளார்.
அவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 பேர் மலேரியா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரிடத்திலேயே மலேரியா தொற்று காணப்படும் நிலையில், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.