A, “முதலாம் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்களால் உத்தியோகபூர்வமாகத் தொகுக்கப்பட்ட அல்குர்ஆனின் மூலப்பிரதி (ஸுஹுஃப்), உமர் (ரழி) அவர்களின் மறைவிற்குப் பின் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது?
B, நபி மனைவியர் (உம்முஹாத்துல் முஃமினீன்) அனைவரும் சிறந்த முன்னுதாரணமான பெண்களாவர். அவர்களில் பெரும்பாலானோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். எனினும், மிகக் குறைந்த காலமே நபிகளாருடன் வாழ்ந்தமையாலோ அல்லது முன்கூட்டியே மரணித்தமையாலோ ஹதீஸ்கள் எதனையும் அறிவிக்காத இருவரது பெயர்களைக் குறிப்பிடுக.”

