ரமழான் (25) கேள்வி

A. இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்கள் இஸ்லாமியர்களுக்கென ஒரு தனித்துவமான நாட்காட்டியை உருவாக்க முற்பட்டபோது, சஹாபாக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது எந்த ஆண்டை “ஆண்டு 1” (முதலாவது ஆண்டு) எனத் தீர்மானிப்பது என்பதில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் ‘ஹிஜ்ரத்’ (மதீனாவிற்குப் புலம்பெயர்ந்த) நிகழ்ந்த ஆண்டே முதலாவது ஆண்டாகத் தீர்மானிக்கப்பட்டது. ஹிஜ்ரி ஆண்டைத் தீர்மானிக்கும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஹிஜ்ரத் தவிர்ந்த வேறு எந்த இரண்டு மிக முக்கியமான நிகழ்வுகள் நடந்த ஆண்டுகளை முதலாம் ஆண்டாகக் கொள்ளலாம் என முன்மொழியப்பட்டன?


B.ஒருமுறை நபிகளார் (ஸல்) அவர்கள் சந்தைக்குச் சென்றபோது, ஒரு தானியக் குவியலுக்குள் கையை நுழைத்துப் பார்த்தார்கள். உட்புறம் ஈரமாக இருந்தது. “மழையினால் நனைந்துவிட்டது” என வியாபாரி கூறியபோது, “யார் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல” எனக் கூறினார்கள். சந்தையில் விலையைச் செயற்கையாக உயர்த்துவதற்காக, வாங்கும் எண்ணம் இல்லாமலேயே ஒரு பொருளுக்கு அதிக விலை கோரி மற்றவர்களைத் தூண்டும் செயலுக்கு இஸ்லாமியப் பொருளாதாரத்தில் என்ன பெயர்? 


நன்றி

Leave a Reply