ரஷ்யாவிடம் தொடர்ந்து எரிபொருள் வாங்குவதால் இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்துவேன்: ட்ரம்ப் தகவல் | trump says i will increase taxes on India for continuing to buy fuel from Russia

வாஷிங்டன்: அமெரிக்க அதிப​ராக ட்ரம்ப் மீண்​டும் பதவி​யேற்​ற பின், அமெரிக்கா​வுடன் வர்த்​தகம் செய்​யும் நாடு​கள் மீது பரஸ்பரவரி விதிக்​கப்​படும் என கூறி​யிருந்​தார். இதன் காரண​மாக அமெரிக்கா​வுட​னான வர்த்தக பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. அமெரிக்கா​வுக்கு ஓராண்​டில் ரூ.8,650 கோடி அளவுக்கு இந்​தியா ஏற்​றுமதி செய்​கிறது. இவற்​றில் மருந்து பொருட்கள், எரிசக்​தி, கனிமங்​கள், எலக்ட்​ரானிக் பொருட்​களுக்கு வரி​விலக்கு உள்​ளது.

ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா அதி​கள​வில் கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வ​தாக கூறிய ட்ரம்ப் இதன் மூலம் உக்​ரைனுக்கு எதிரான ரஷ்​யா​வின் போருக்​கும் இந்​தியா நிதி அளிக்​கிறது’’ என குற்​றம் சாட்​டி​னார். இந்​தி​யா​வில் இருந்து ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு நாளை முதல் 25% வரி விதிக்​கப்​படும் என அதிபர் ட்ரம்ப் ஏற்​கெனவே கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் ட்ரம்ப் நேற்று அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: வர்த்​தகம் செய்​வதற்கு ஏற்ற நல்ல நாடாக இந்​தியா இல்​லை. ஏனென்றால், இந்​தியா அமெரிக்கா​வுக்கு ஏராள​மான பொருட்​களை ஏற்​றுமதி செய்​கிறது.

ஆனால், அமெரிக்​கா​விடம் இருந்து இறக்குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு இந்​தியா மிக அதிக வரியை விதிக்​கிறது. இதனால் இந்​தி​யா​வில் அமெரிக்க பொருட்​களை விற்க முடிய​வில்​லை. அதனால் இந்​தி​யா​வில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்​கப்​பட்​டது. ஆனால், அடுத்த 24 மணி நேரத்​தில் வரியை மேலும் உயர்த்​த உள்​ளேன். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

நன்றி

Leave a Reply