ரஷ்ய அமைச்சருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

ரஷ்ய பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேக்சிம் ரெஷித்னிகோவுடன் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவும் உடன் வந்துள்ளனர்.

பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தப் பயணத்தின் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ரஷ்ய பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேக்சிம் ரெஷித்னிகோவுடன் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

உணவு, விவசாயம், மருத்துவம் என பல்வேறு துறை சார்பாக இந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இது குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; ரஷ்ய பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேக்சிம் ரெஷித்னிகோவுடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடந்தது.

உணவு மற்றும் விவசாயம், மருந்துகள், ஜவுளி மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்ற துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தோம்.

இரு நாடுகளும் இணைந்து பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் ஒன்றாக உறுதிபூண்டுள்ளோம் என கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply