ரூ.10,699 விலையில் 7000mAh பேட்டரியா? அமேசானை அதிரவைக்கும் Poco M7 Plus 5G

ரூ.10,699 விலையில் 7000mAh பேட்டரியா? அமேசானை அதிரவைக்கும் Poco M7 Plus 5G - முழு விவரம்!

Poco M7 Plus  ஸ்மார்ட்போன் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50MP கேமரா உள்ளிட்ட பல சிறந்த அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனுக்கான சலுகைகள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்களைப் பற்றிப் பார்ப்போம்.

தற்போது, ​​4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அமேசானில் 24 சதவீதம் தள்ளுபடியில் ரூ. 12,199-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி EMI-யில் இந்த போனை வாங்கினால், கூடுதலாக ரூ. 1500 தள்ளுபடி கிடைக்கும். எனவே, இந்த போனை ரூ. 10,699-க்கு வாங்கலாம்.

Poco M7 Plus 5G specifications

போக்கோ எம்7 பிளஸ் 5ஜி அம்சங்கள்: போக்கோ எம்7 பிளஸ் 5ஜி போன் 6.9-இன்ச் ஃபுல் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection) பாதுகாப்பு போன்ற பல டிஸ்ப்ளே அம்சங்கள் உள்ளன.

ரூ.10,699 விலையில் 7000mAh பேட்டரியா? அமேசானை அதிரவைக்கும் Poco M7 Plus 5G - முழு விவரம்!

போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ்-இல் இயங்குகிறது. இருப்பினும், இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்புப் புதுப்பிப்புகள் கிடைக்கும். இந்த புதிய போக்கோ போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் அகச்சிவப்பு சென்சார் ஆதரவும் உள்ளது. போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 3 6nm 5G SoC சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போக்கோ ஸ்மார்ட்போனில் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அட்ரினோ 619 ஜிபியு கிராபிக்ஸ் கார்டும் உள்ளது.

இதையும் படியுங்கள்: Nothing-இன் அடுத்த ‘வேற லெவல்’ ட்ரெண்ட்! | பட்ஜெட் விலையில் 2 புதிய போன்கள், மிரட்டும் மஞ்சள் Ear (3)

குறிப்பாக, போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50MP முதன்மை கேமரா மற்றும் ஒரு இரண்டாம் நிலை கேமரா கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8MP கேமராவையும் கொண்டுள்ளது. இது தவிர, இந்த போனில் எல்இடி ஃபிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் அடங்கும்.

ரூ.10,699 விலையில் 7000mAh பேட்டரியா? அமேசானை அதிரவைக்கும் Poco M7 Plus 5G - முழு விவரம்!

போக்கோ எம்7 பிளஸ் 5ஜி 7000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போன் குரோம் சில்வர், அக்வா ப்ளூ மற்றும் கார்பன் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

இது IP64 தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பையும் கொண்டுள்ளது. இந்தத் தொலைபேசியில் 5G, டூயல் 4G VoLTE, வைஃபை 6 802.11 ac, புளூடூத் 5.1, GPS + GLONASS மற்றும் USB டைப்-C போன்ற பல்வேறு இணைப்பு வசதிகள் உள்ளன. இந்தத் தொலைபேசியின் எடை 217 கிராம் ஆகும்.

நன்றி

Leave a Reply