வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரம் அடைந்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் ஒருங்கிணைப்புடன் இயக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காரணத்தால் அங்கு ஒரு பாதாள உலகத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டாலும், அவை மிகவும் தீவிரமாக இருக்கவில்லை. இந்தக் குழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு God father இருந்தமையே இதற்குக் காரணம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், பாதாள உலகத்திற்குப் பொறுப்பான அந்தந்த அரசாங்கங்களின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் ஈடுபட்டதாக அமைச்சர் கூறினார்.

பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படும் போது, தொடர்புடைய அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தப்பிறகு அவ்வாறு எந்தவொரு பாதாள குழுக்கழுடனும் டீல் அரசியல் செய்யவில்லை இதனால் அவர்களால் எதுவும் செய்யமுடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது எனவும் தற்போது பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே தொகுதிகள் பகிரப்பட்டதால் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரட்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply