வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம்! – Athavan News

வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வர்த்தகரை கொலை செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, குறித்த சந்தேகநபர்களிடமிருந்து ரிவோல்வர் ரக கைத்துப்பாக்கி ஒன்றும், 6 தோட்டாக்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply