வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | cm stalin speech in all party meeting

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​வது உண்​மை​யான வாக்​காளர்​களை நீக்​கு​வதற்​கான தந்​திரம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​களுக்கு (எஸ்​ஐஆர்) திமுக மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சிகள் இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இந்​நிலை​யில், இதுதொடர்​பாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அனைத்​துக் கட்சி கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக, காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், மதி​முக, விசிக, மக்​கள் நீதி மய்​யம், தேமு​திக, திரா​விடர் கழகம் உட்பட 49 கட்​சிகள் பங்​கேற்​றன. கூட்​டத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை தேர்​தல் ஆணை​யம் நிறுத்தி வைக்க வேண்​டும். இல்​லை​யென்​றால், தமிழக கட்​சிகள் சார்​பில் உச்சநீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​படும் என்று ஸ்டா​லின் முன்​வைத்த தீர்​மானம் அனைத்து கட்​சிகளின் ஆதர​வோடு நிறைவேற்​றப்​பட்​டது.

கூட்​டத்​தில் முதல்​வர் ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: மக்​கள் வாக்​குரிமையை பறிக்​கும்வித​மாக​வும், அவர்​களை அச்​சுறுத்​தும் வித​மாக​வும் பிஹாரில் வாக்​களார் பட்​டியல் சிறப்பு தீவிரதிருத்த பணி​கள் நடை​பெற்​றன. அது​போல தமிழகம் உள்ளிட்ட மாநிலங்​களி​லும் நடை​பெற உள்ளது. நேர்​மை​யான தேர்​தல் நடத்த உண்​மை​யான வாக்​காளர் பட்​டியல் அவசி​யம்​தான். அதற்​காக உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்​டும். பதற்​றமில்​லாத சூழலில் அதை செய்ய வேண்​டும். அப்​போது​தான் அந்த பணி​களை முறை​யாக செய்ய முடி​யும்.

மாறாக தேர்​தலுக்கு சில மாதங்​களுக்கு முன்​பாக முழு​மை​யான திருத்​தப் பணி​கள் செய்ய நினைப்​பது உண்​மை​யான வாக்​காளர்​களை நீக்​கு​வதற்​கான தந்​திர​மாகும். அதை​தான் பிஹாரில் செய்​தார்​கள். அதனால்​தான் அதனை எதிர்க்​கிறோம். தமிழக மக்​களின் உரிமை​களைக் காக்க, ஜனநாயக குரலை காக்க வரைவு தீர்​மானத்தை முன் வைத்​துள்​ளோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

முதல்​வர் ஸ்​டா​லின் சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக மக்​களின் வாக்​குரிமையை பறித்​து, ஜனநாயகத்தை படு​கொலை செய்​யும் நோக்​கோடு அவசரக​தி​யில் மேற்​கொள்​ளப்​படும் எஸ்​ஐஆர்​-க்கு எதி​ராக ஒன்​றிணைந்து குரல் கொடுப்​பது அனைத்து கட்​சிகளின் கடமை. வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை குழப்​பங்​கள், ஐயங்​கள் இல்​லாமல் போதிய கால அவகாசத்​துடன், 2026 பொது தேர்​தலுக்கு பின்பு நடத்த வேண்​டும் என்ற நமது கோரிக்​கையை தேர்​தல் ஆணை​யம் ஏற்​காத​தால், உச்ச நீதி​மன்​றத்தை நாட தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்​ளோம்.

அனைத்து கட்சி கூட்​டத்​தில் பங்​கேற்ற கட்​சிகளின் தலை​வர்​களுக்​கும் நன்​றி. இக்​கூட்​டத்​தில் பங்​கேற்​காதவர்​களும், தங்​களு​டைய கட்​சிகளில் எஸ்​ஐஆர் குறித்து வி​வா​தித்து, ஜனநாயகத்தை காத்​திடும் முன்​னெடுப்​பை மேற்​கொள்​ள வேண்​டும்​. இவ்​வாறு முதல்வர் அதில் ​ தெரிவித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply