வானொலிக்கு எதிராக அவதூறு வழக்கு – ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்கும் Mp

பொதுஜன பெரமுனவின் சானக Mp ஒரு வானொலி அலைவரிசைக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது மறைந்த உறவினர், பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக ஒரு நிகழ்ச்சியின் போது குறித்த வானொலி பொய்யாகக் கூறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த கருத்துக்கள் அடிப்படையற்றவை மற்றும் அவதூறானவை என்று சானக தெரிவித்துள்ளார்.  அடுத்தடுத்த ஒளிபரப்புகளின் போது அறிக்கையைத் திருத்துமாறு முன்னர் கோரிக்கைகள் விடுத்த போதிலும், அந்த வானொலி அவ்வாறு செய்யத் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, இந்த வழக்கு பொதுத் திருத்தம் மற்றும் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு ஆகிய இரண்டையும் கோருவதாக தெரிவித்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நன்றி

Leave a Reply