“விஜய் அனுமதி பெற்றுதான் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை” – அண்ணாமலை கருத்து | Annamalai says vijay there is no need to go to Karur with permission

சென்னை: ‘அனு​மதி பெற்​று​த்தான் கரூர் செல்ல வேண்​டும் என்ற நிலை இல்​லை. கரூர் பாது​காப்​பான ஊர். விஜய் தைரிய​மாக வரலாம்’ என அண்​ணா​மலை தெரி​வித்​தார். தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தாயார் மறைவையொட்​டி, சென்னை சாலிகி​ராமத்​தில் உள்ள அவரது வீட்​டுக்​குச் சென்று பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை நேற்று அஞ்​சலி செலுத்​தி​னார்.

அதைத்​தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்​தில் எல்​லோருக்​கும் எந்த இடத்​துக்கு செல்​லவும் உரிமை உண்டு. என்​னைப் பொறுத்தவரை கரூர் சென்று பாதிக்​கப்​பட்ட மக்​களை விஜய் சந்திக்க டிஜிபி அலு​வல​கத்​தில் பாதுகாப்பு கேட்க வேண்​டிய அவசி​யம் தமிழகத்​தில் இல்​லை. இந்​தி​யா​வில் இருக்​கக்​கூடிய சில பகு​தி​களைப் போல, அனு​மதி பெற்​று​தான் கரூர் செல்ல வேண்​டும் என்ற நிலை இங்கு கிடை​யாது.

எனவே, விஜய் தைரிய​மாக கரூர் செல்​லலாம். விஜய்​யின் பாது​காப்பை அவர்​தான் பார்த்​துக்​கொள்ள வேண்​டும். நானும் கரூரைச் சார்ந்​தவன்​தான். எங்க ஊருக்கு வரு​வதற்கு அனு​மதி எதற்​கு? கரூருக்கு வரு​வது கடினம் என்​றால், எங்க ஊரில் பூதாகர​மான மக்​களா இருக்​கிறார்​கள்? அதனால், விஜய் எங்​கள் ஊருக்கு வர நினைத்​தால் வரலாம். யாரை பார்க்க வேண்​டுமோ வந்து பார்த்​து​விட்டு செல்​லட்​டும்.

கரூருக்கு செல்​வதே ஒரு அச்​சுறுத்​தல் என்​பது போன்ற பிம்​பத்தை நாம் ஏற்​படுத்த வேண்​டாம். இது நமது தமிழகத்தை நாமே தாழ்த்தி கீழே இறக்​கு​வது​போல ஆகி​விடும். கரூருக்கு விஜய் சென்​றால் அவரது உயிருக்கு ஆபத்து இருக்​கிறது என மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறியது குறித்து கேட்​கிறீர்​கள். நயி​னார் நாகேந்​திரன் பேசி​யதை நான் கவனிக்​க​வில்​லை. கரூர் பாது​காப்​பான ஊர்.

திரு​மாவளவனுக்கு இசட் பிரிவு பாது​காப்பு வழங்​கு​வது மக்​களை அடிப்​ப​தற்​காக​வா? திரு​மாவளவன் ஒரு மூத்த தலை​வர். சமீபத்​தில் அவரது தொண்​டர்​கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்​றுக்​கொள்ள முடி​யு​மா? இதில் அதிர்ச்சி என்​னவென்​றால், உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தியை தாக்​கியதற்​காக, சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வலி​யுறுத்தி ஆர்ப்​பாட்​டம் நடத்​த சென்ற இடத்​தில், இவர்​களே இன்​னொரு​வரை தாக்​கி​னால் எப்​படி? ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாமை ஏன் பள்​ளிக்​குள் நடத்​துகிறார்​கள்? அரசி​யல் லாபத்​துக்​காக பள்​ளிக்​கூடத்​தைப் பயன்​படுத்தி கொண்​டிருக்​கிறார்​கள்.

கோவை​யில் புதி​தாக கட்​டப்​பட்ட மேம்​பாலத்​துக்கு ஜி.டி.​நா​யுடு பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது. ஜி.டி.​நா​யுடு சாதி​களைத் தாண்டி பொது தலை​வர். அவரது பெயரை பாலத்​துக்கு சூட்​டியது சரி​தான். தமிழகத்​தில் உள்ள உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு உட்​பட்ட அனைத்து பகு​தி​களி​லும் சாதிப் பெயர்​களுக்கு மாற்று பெயர்​களை வைக்க உத்​தர​விட்ட அரசாணை​யில் கருணாநிதி பெயர் இருக்​கிறது. ஆனால், எம்​ஜிஆர் பெயர் இல்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

நன்றி

Leave a Reply