தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (09.10.25) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் குறித்த சந்தேக நபரின் ஐந்து வங்கிக் கணக்குகளும் அடங்கும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பின்னர் சந்தேக நபரை 23 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
The post ஷாதிகா லக்சானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்! appeared first on Global Tamil News.