ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் பஸ் விபத்து: பெண் பலி, குழந்தைகள் உட்பட நால்வர் காயம் – Sri Lanka Tamil News

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியின் யட்டியந்தோட்டை, தங்கொலவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற பஸ் விபத்தில் 40 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ், வீதியோரத்தில் நின்றிருந்த அந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மகள் மற்றும் மகன் இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பஸ்ஸில் பயணித்த இந்திய சுற்றுலாப் பயணிகளில் இருவரும் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யட்டியந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply