ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 27ஆம் திகதி  இடம்பெற்ற  தீ விபத்தில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த தீ விபத்தில் ஏற்கனவே 128 பேர் உயிரிழந்த நிலையில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 104 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply