2026-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பல பகுதிகளில் உறைபனி மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என பிபிசி (BBC Weather) மற்றும் மெட் ஆபீஸ் (Met Office) கணித்துள்ளன.
லண்டனில் எதிா்வரும் ஜனவரி 3 (சனிக்கிழமை) மற்றும் ஜனவரி 6 (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் லேசான பனிப்பொழிவு (Light Snow) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 5-ஆம் திகதி விடுமுறை முடிந்து மக்கள் வேலைக்குத் திரும்பும் போது கடும் குளிர் நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
மேலும் புத்தாண்டு தினம் இரவு வெப்பநிலை 1°C முதல் -1°C வரை காணப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் ஜனவரி முதல் வாரத்தில் இரவு நேரங்களில் வெப்பநிலை -3°C வரை செல்லக்கூடும் எனவும் பகல் நேரங்களில் 3°C முதல் 5°C வரை மட்டுமே இருக்கும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது
இந்தக் கடும் குளிர் காரணமாக UKHSA அமைப்பு லண்டனுக்கு மஞ்சள் நிற (Yellow) சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன் வட இங்கிலாந்து பகுதிகளுக்கு ஆம்பர் (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 5 வரை அமுலில் இருக்கும்.
இதேவேளை ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக ‘மஞ்சள் எச்சரிக்கை’ (Yellow Warning for Snow and Ice) ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழ் செல்ல வாய்ப்புள்ளதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துமாறும், வீடுகளை கதகதப்பாக (குறைந்தது 18°C) வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Tag Words: #LondonWeather #UKWeather #SnowInLondon #Winter2026 #ColdHealthAlert #MetOffice #LondonSnow #NewYear2026 #UKColdSnap #TamilNews
The post ❄️ லண்டனில் பனிப்பொழிவு எச்சரிக்கை: appeared first on Global Tamil News.
