79
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அமெரிக்க விமானப் படையின் C-130J Super Hercules ரக சரக்கு விமானம் இன்று காலை நிவாரணப் பொருட்களுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது!
🌍 சர்வதேச ஒத்துழைப்பு
நாடு முழுவதும் நிவாரணப் பணிகளில் உதவுவதற்காக அமெரிக்க விமானப் படையின் இரு Super Hercules விமானங்கள் கொழும்புக்கு வருகை தந்துள்ளன. இந்த விமானங்கள் இலங்கை விமானப் படையினருடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
