📉 “இலங்கை ஏன் எப்போதுமே  IMFஇன்  திட்டங்களில் இருக்கின்றது   –  அரவிந்த் சுப்பிரமணியன்  

இந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன் (Dr. Arvind Subramanian), இலங்கையின் பொருளாதார நிலை குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகள் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளன.

இலங்கை தனது பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் இந்தத் தருணத்தில், எதிர்காலத்தில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படாமல் இருக்க “நினைவாற்றல்” (Institutional Memory) மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“இலங்கை ஏன் எப்போதுமே சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டங்களில் இருக்கின்றது?” என கேள்வி எழுப்பிய அவர் இலங்கை தன்னிடமுள்ள அடிப்படை ஸ்திரமற்ற தன்மையிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.

இலங்கையின் பொருளாதார வரலாறு என்பது ஒரு தற்காலிகமான ஸ்திரத்தன்மையையே காட்டி வந்துள்ளது. “ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு நீங்கள் எப்போதும் கடினமாக உழைக்க வேண்டும், அதை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது,” என அவர் எச்சரித்துள்ளாா்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார மேலாண்மை குறைபாடுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட நெருக்கடியை இலங்கை சமூகம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, இந்த கசப்பான நினைவுகளைச் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புக்குள் ஒரு பாடமாகச் செதுக்கி வைக்க வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் இலக்கு (Inflation Targeting) போன்ற ஒரு சட்டப்பூர்வ அல்லது சமூகக் கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் எதிர்கால நெருக்கடிகளைத் தடுக்க வேண்டும். “நெருக்கடியின் நினைவுகளை நீங்கள் பேணவில்லை என்றால், எதிர்காலத்தில் மீண்டும் ஒரு வீழ்ச்சி ஏற்படும் அபாயம் அதிகம்,” என அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.

Tag Words: #ArvindSubramanian #SriLankaEconomy #IMF #EconomicStability #LankaCrisis #FinancialMemory #ColomboNews #EconomicGrowth2026 #PolicyWarning

The post 📉 “இலங்கை ஏன் எப்போதுமே  IMFஇன்  திட்டங்களில் இருக்கின்றது   –  அரவிந்த் சுப்பிரமணியன்   appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply