அடுத்த மூன்று WTC இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமம் இங்கிலாந்துக்கு!

அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்து நடத்தும் என்பதை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஐ.சி.சி.யின் வருடாந்திர மாநாட்டில் இந்த முடிவு உறுதி செய்யப்பட்டது.

இதன் அர்த்தம் அண்மைய இறுதிப் போட்டிகளை நடத்துவதில் வெற்றிகரமான சாதனைப் பதிவைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2027, 2029 மற்றும் 2031 இறுதிப் போட்டிகளை நடத்தும் என்பதாகும்.

2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர், முதல் மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை இங்கிலாந்து வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப்பின் முதல் மூன்று சுழற்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தின் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன.

2025 இறுதிப் போட்டியை லொர்ட்ஸில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா கடந்த மாதம் அவுஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

2023 இறுதிப் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா 209 ஓட்டங்களினால் இந்தியாவை வீழ்த்தியது.

2021 இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நியூஸிலாந்து 08 விக்கெட்டுகளினால் இந்தியாவை வீழ்த்தியது.

ஐ.சி.சி அதன் வருடாந்திர மாநாட்டிற்குப் பின்னர், ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் முன்முயற்சி, அமெரிக்க கிரிக்கெட்டின் நிலை மற்றும் இரண்டு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளையும் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply