அணு ஆயுதத்தை ஏவ கட்டளையிடும் தலைவர்கள் அனைவரும் இறந்தாலும் பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’ | Russia Dead Hand is ready to take revenge even if everyone dies

மாஸ்கோ: அமெரிக்க அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வேன் என தெரி​வித்​தார். இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது.

இதில் உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. இதையடுத்​து, போரை நிறுத்த ரஷ்​யா​வுக்கு 50 நாள் காலக்​கெடு விதித்​தார் ட்ரம்ப். பின்​னர் இதை 12 நாட்​களாக குறைத்​தார். இதுகுறித்து ரஷ்ய முன்​னாள் அதிபரும் அந்​நாட்டு பாது​காப்பு கவுன்​சிலின் துணைத் தலை​வரு​மான டிமிட்ரி மெட்​வ​தேவ் எக்ஸ் தளத்​தில், “ட்​ரம்​பின் ஒவ்​வொரு காலக்​கெடு​வும் போரை நோக்கி தள்​ளும் நடவடிக்​கை’’ என பதி​விட்​டார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில், “டிமிட்ரி மெட்​வ​தேவ் அத்​து​மீறி பேசி வரு​கிறார். எனவே, ரஷ்யா அருகே 2 அணுசக்தி நீர்​மூழ்​கி​களை நிலைநிறுத்த உத்​தர​விட்​டுள்​ளேன்’’ என பதி​விட்​டிருந்​தார். இதை அணு ஆயுதப் போருக்​கான மிரட்​டலாக கரு​திய டிமிட்ரி மெட்​வ​தேவ், ‘அமெரிக்​கா​வின் எந்த ஒரு பெரிய நடவடிக்​கை​யும் டெட் ஹேண்ட்’ நடவடிக்​கையை தூண்ட வழி​வகுக்​கும். அதன் பிறகு பின்​வாங்க மாட்​டோம்’’ என எச்​சரிக்கை விடுத்​தார்.

இதையடுத்​து, டெட் ஹெண்ட் என்​றால் என்ன என்று அனை​வரும் இணை​யத்​தில் தேட ஆரம்​பித்து விட்​டனர். அமெரிக்​கா, சோவி​யத் ரஷ்யா இடையே பனிப்​போர் நடை​பெற்​றது. அப்​போது, அமெரிக்​கா​வின் தாக்​குதலில் தலைநகரமே அழிந்​து, அதிபர், ராணுவ தளபதி உள்​ளிட்​டோர் இறந்​து​விட்​டாலும் தன்​னிச்​சை​யாக இயங்கி பதிலடி கொடுப்​ப​தற்​காக சோவி​யத் ரஷ்​யா​வால் உரு​வாக்​கப்​பட்​டது​தான் டெட் ஹேண்ட்.

டெட் ஹேண்ட் என்​பது 1980-களில் உரு​வாக்​கப்​பட்ட சோவி​யத் யூனியன் காலத்து அணு ஆயுத கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு அமைப்பு ஆகும். எதிரி நாடு​கள் அணு குண்டு வீசி​னால், அதனால் ஏற்​படும் நில அதிர்​வு, அணுக் கதிர்​வீச்சு பற்​றிய தகவல் அந்த அமைப்​புக்கு கிடைக்​கும்.

அதன் பிறகு தலைமை உத்​தர​விட்​டதும் குறிப்​பிட்ட அந்த நாட்​டின் மீது தனது தாக்​குதலை நடத்​தும். பொது​வாக அணு ஆயுத தாக்​குதலுக்கு உத்​தர​விடும் அதி​காரம் அதிபருக்கு மட்​டுமே இருக்​கும். இந்த நிலை​யில், எதிரி நாட்​டின் அணுகுண்டு தாக்​குதலில் ரஷ்​யா​வின் அதிபர் உட்பட முக்​கிய தலை​வர்​கள் உயி​ரிழந்​து​விட்​டால், அங்​கிருந்து உத்​தரவு வராத நிலை​யில் அதை தானாக புரிந்​து​கொள்​ளும்.

இதையடுத்து அதிபரின் உத்​தரவு இல்​லாமலேயே அதில் இருக்​கும் ஏவு​கணை தானாக வெளி​யில் வந்து ஆங்​காங்கே பூமிக்​கடி​யில் புதைத்து வைக்​கப்​பட்​டுள்ள அணுகுண்​டு​களுக்கு தகவல் கொடுக்​கும். பின்​னர் அவை தானாக செயல்​பட்​டு, எந்த நாடு தாக்​குதல் நடத்​தி​யதோ அந்த நாட்டை குறி​வைத்து தாக்​குதல் நடத்தி துவம்​சம் செய்​து​விடும்.

சோவி​யத் யூனியன் உடைந்​து​விட்​ட​போ​தி​லும், இந்த டெட் ஹேண்ட் அமைப்பை ரஷ்யா நவீன தொழில்​நுட்​பத்​துடன் புதுப்​பித்து வைத்​துள்​ளது. இதை மனதில் வைத்​து​தான் மெட்​வ​தேவ் அமெரிக்கா​வுக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். டெட் ஹேண்ட் அமைப்பு மிக​வும் மோச​மான அணு ஆயுதம் ஆகும்.

இது இப்​போது செயற்கை நுண்​ணறிவு மற்​றும் செயற்​கைக்​கோள் கண்​காணிப்பு அமைப்​பு​களு​டன் ஓரளவு ஒருங்​கிணைக்​கப்​பட்டு வேக​மாக​வும் நம்​பகத்​தன்​மை​யுட​னும் செயல்​படு​வ​தாக கூறப்​படு​கிறது. மெட்​வ​தே​வின் சமீபத்​திய கருத்​து​கள் இந்த அமைப்​பு இன்​னும்​ நடை​முறை​யில்​ இருப்​ப​தை உறு​திப்​படுத்​துவ​தாக உள்​ளது.

நன்றி

Leave a Reply