அணையா விளக்கு தூபி மீளமைப்பு – Global Tamil News

அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது அணையா விளக்கு ஏற்ப்பட்டு இருந்தது. போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணைய விளக்கு நினைவு தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது.

குறித்த நினைவு தூபியை விசமிகள் அடித்து உடைத்துள்ளனர். இந்நிலையில் குறித்த நினைவு தூபியை மீள அமைக்கும் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply