அதிகம் விரும்பும் நாடாக இலங்கை – Jaffna Muslim

இந்திய பயணிகள் பண்டிகைக் காலங்களில் அதிகம் விரும்பும் சர்வதேச சுற்றுலாத் தலங்கள் குறித்த ஆய்வறிக்கையை MakeMyTrip இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, இந்தியர்கள் அதிகம் முன்பதிவு செய்த நாடுகள் வரிசையில் இலங்கை மூன்றாமிடத்தில் உள்ளது.

அத்துடன் குறித்த வரிசையில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியம் இரண்டாமிடத்தில் உள்ளது. இலங்கையைத் தொடர்ந்து வியட்நாம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த காலங்களை விட வியட்நாம் நோக்கிய பயண ஆர்வம் இந்தியர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

இலங்கை மற்றும் தாய்லாந்து தவிர, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா (UK), அமெரிக்கா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளும் இந்தியர்களின் விருப்பமான இடங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முக்கிய சுற்றுலா மையங்களில் மேலதிக காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்தியர்களுக்கான விசா நடைமுறைகள் எளிதாக்கப்பட்டதும், குறைந்த செலவில் விமானப் பயணங்கள் அமைவதும் இலங்கை இந்த இடத்தைப் பிடிக்க முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

நன்றி

Leave a Reply