அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து நாட்டுக்கு நல்லதுதானே செய்துள்ளார் முதல்வர்: கமல்ஹாசன் | Kamal says cm has done good for the country by attracting more industrial investments

சென்னை: ‘அதிக முதலீடு​களை ஈர்த்து தமிழக முதல்​வர் நாட்​டுக்கு நல்​லது​தானே செய்​துள்​ளார்’ என்று பாஜக​வினரின் விமர்சனத்​துக்கு மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் பதில் அளித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: “தெரு​நாய் பிரச்​சினை குறித்தும் தெரு​நாய்​களைக் காப்​பாற்ற வேண்​டும் என்று பிராணி​கள் நல ஆர்​வலர்​கள் கூறு​வது குறித்​தும் கேட்​கிறீர்​கள். இதற்கான தீர்வு மிக​வும் சுலபம்.

விஷ​யம் தெரிந்​தவர்​கள், உலக சரித்​திரம் மற்​றும் சமூக சுகா​தா​ரம் என்​னவென்று அறிந்​தவர்​கள் கழுதைகளை எங்​கும் காணோம் என்று கவலைப்​படு​கிறார்​களா? கழுதைகள் நமக்​காக எவ்​வளவோ பொதி சுமந்​திருக்​கின்​றன? இப்​போது கழுதைகளைக் காண முடிகிற​தா? கழுதைகளைக் காப்​பாற்ற வேண்​டும் என்று யாராவது பேசுகிறார்​களா? எல்லா உயிரினங்களை​யும் காப்​பாற்ற வேண்​டும். எவ்​வளவு முடி​யுமோ அவ்​வளவு காப்​பாற்ற வேண்​டும். இது​தான் எனது கருத்​து” என்றார்.

தமிழக முதல்​வரின் வெளி​நாட்டு பயணம் குறித்து பாஜக​வினர் விமர்​சனம் செய்​கின்​றார்​களே என்று கேட்​டதற்​கு, “என்​னைப் பொருத்​தவரை, ஒரு​வர் நல்​லது செய்​யும்​போது, அவர் எந்த கட்​சி​யைச் சேர்ந்​தவர் என்​பதை நான் பார்ப்​பது கிடை​யாது. நாட்​டுக்கு நல்​லது நடக்​கிறது என்​றால் எதிர்க்​கட்​சி​யாக இருந்​தா​லும் ஏற்​றுக்​கொள்ள வேண்​டும். வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்த்து தமிழக முதல்​வர் நாட்​டுக்கு நல்​லது​தான் செய்​துள்​ளார் என்​றார்.

பிஹாரில் நடந்த வாக்​காளர் அதி​கார யாத்​திரை​யின்​போது பிரதமரின் தாயாரை அவமரி​யாதை​யாக பேசப்​பட்​ட​தாகக்கூறப்படுவது குறித்து கேட்​டதற்​கு, “யாரை​யும் அவமானப்​படுத்​து​வது போல் யாரும் பேச வேண்​டிய அவசி​யமில்​லை. ஓட்டு காணா​மல் போவது, வாக்​காளர் பட்​டியலில் பெயர் காணா​மல் போவது குறித்து நானே நீண்ட கால​மாக சொல்லி வரு​கிறேன்.

வாக்​காளர் பட்​டியலில் எனது பெயர்​கூட காணா​மல் போயிருக்​கிறது. வாக்​காளர் பட்​டியலில் பெயர் காணா​மல் போயிருந்​தால் சம்​பந்​தப்​பட்ட அரசு அலு​வலர்​களிடம் சென்று முறை​யிட்டு பட்​டியலில் திருத்​தம் செய்​து​கொள்ள வேண்​டும். இது ஒரு சிறிய விஷயம் இதை​விட பெரிய குற்​றங்​கள் நடந்​த​தாக எங்​களுக்​குச் சந்​தேகம் வந்​த​போது நாங்​கள் கூட கடிதம் கொண்டு கொடுத் திருக்​கிறோம். இவையெல்​லாம் நடந்​து​கொண்​டே​தான் இருக்​கின்​றன. அதனுடைய உச்சகட்​டம்​தான் பிஹாரில் நடக்​கும்​ சம்​பவங்​கள்​.” இவ்​வாறு கமல்​ஹாசன்​ கூறி​னார்.

நன்றி

Leave a Reply