பிரித்தானிய அரசு 2029 ஆம் ஆண்டிற்குள் 1.5 மில்லியன் புதிய வீடுகளை நிர்மானிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
இதற்காக கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அத்துடன் குறித்த திட்டத்திற்காக 625 மில்லியன் பவுண்டுகள் நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கெட்டுமானத் தொழிலாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், சிறு மற்றும் நடுத்தர அளவிலான கட்டுமான நிறுவனங்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாககத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசேமயம் குறித்த நிறுவனங்களும் தற்போது தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை அதிகளவில் உள்ளீர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பது மட்டுமல்லாது குடியிருப்புகளுக்கு காணப்படும் பற்றாக்குறையினையும் நிவர்த்தி செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் மூலம் பிரித்தானியாவில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தினையும் மேம்படுத்த முடியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.