அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சகோதரர்கள் பல மில்லியன் டொலா் மோசடி   – நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்பார்ப்பு

 

 
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சகோதரர்களான பாஸ்கர் சாவானி மற்றும் அருண் சாவானி ஆகியோருக்கு பல மில்லியன் டொலர் மோசடி வழக்குகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சாவானி குரூப்’ (Savani Group) என்ற பெயரில் வணிக வலையமைப்பை நடத்தி வந்த இவர்களது நிறுவனம் மூலம் பல்வேறு சட்டவிரோத நிதி நடவடிக்கைகள் மற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோசடி நடவடிக்கைகள் மூலம் பல முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் கோடிக்கணக்கான டொலர் நஷ்டத்தை சந்தித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

#SavaniBrothers #MillionDollarFraud #Pennsylvania #USCourt #IndianDiaspora#அமெரிக்கா #பென்சில்வேனியா #மோசடிவழக்கு #SavaniGroup #சிறைத்தண்டனை #சர்வதேசசெய்தி 

 

நன்றி

Leave a Reply