அமெரிக்காவில்  நோரோவைரசினால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு 

 

அமெரிக்காவில் தற்போது நோரோவைரஸ் (Norovirus) எனப்படும் தீவிரமான வயிற்றுப் புண்  வைரஸ் வேகமாகப் பரவி வருவ தனால் பல மாநிலங்களில் பொதுமக்கள் கொத்து கொத்தாகப்  பாதிக்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

 இது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் மிகவும் தொற்றக்கூடிய ஒரு வைரஸ் ஆகும். இது பொதுவாக  குளிர்கால வாந்தி நோய் (Winter Vomiting Bug)  என  அழைக்கப்படுகிறது.  காதாரமற்ற உணவு, அசுத்தமான நீர் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நேரடித் தொடர்பு மூலம் இந்த வைரஸ் எளிதில் பரவும் எனத் தொிவிக்கப்படுகின்றது.

விடுமுறை தினங்களின் நெருக்கம், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் ஆகியவற்றால் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாகப் பாடசாலைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் உணவகங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

 அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் குறைந்தது 20 விநாடிகளுக்குக் கைகளைக் கழுவ வேண்டும். பாதிக்கப்பட்ட  குறிப் பாகச் சமைக்கப்படாத கடல் உணவுகள், அசுத்தமான நீர் போன்றவற்றைக் கவனமாகக் கையாளுதல்,   வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கிருமி நாசினிகளைப் பயன்படுத்திச் சுத்தமாகப் பராமரித்தல் போன்ற பாதுகாப்பு முறைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

The post அமெரிக்காவில்  நோரோவைரசினால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு  appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply