
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வசித்து வந்த இந்தியரான லிக்னேஷ்குமார் பட்டேல் (வயது 38), முதியவர்களை குறிவைத்து பெரிய அளவில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கில் எட்வர்ட்ஸ்வில் நகர போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரணையின் போது, அவர் கொரியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக நடித்து முதியவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து பணம் மற்றும் நகைகளை திருடி வந்தது தெரிய வந்தது. இவ்வாறு பல சம்பவங்களின் மூலம் சுமார் ரூ.62 கோடி மதிப்பிலான மோசடியில் அவர் ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் லிக்னேஷ்குமார் பட்டேலுக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
