‘அமெரிக்காவுக்கு வந்து பயிற்சி அளித்துவிட்டு சொந்த நாட்டுக்கு சென்றுவிடுங்கள்’ – ட்ரம்ப்பின் எச்-1பி விசா பிளான்! | Come to America train and go This is Trump’s H 1B visa approach

வாஷிங்டன்: அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவுக்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.

H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்கார் பெசென்ட், “எச்-1பி விசாக்களுக்கான ட்ரம்ப்பின் புதிய அணுகுமுறை அமெரிக்காவின் உற்பத்தி திறனை மீட்டெடுக்கும் அறிவு பரிமாற்ற முயற்சி. பல ஆண்டுகளாக வெளிநாடுகளையே சார்ந்திருந்த பிறகு, அமெரிக்க உற்பத்தித் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதே ட்ரம்ப்பின் புதிய அணுகுமுறை.

20-30 ஆண்டுகளாக நாம் துல்லியமான உற்பத்தி வேலைகளை இங்கே செய்யவில்லை. இப்போது கப்பல் கட்டுமானம் மற்றும் செமி கண்டக்டர் தொழிலை அமெரிக்காவுக்கு மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம். இதற்கு அரிசோனாவில் பெரிய வசதிகள் இருக்கும்.

எனவே, அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க அத்தகைய திறன்களைக் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களை மூன்று, ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு இங்கு கொண்டு வருவதே அதிபரின் தொலைநோக்குப் பார்வை என்று நான் நினைக்கிறேன். இங்குள்ளவர்களுக்கு பயிற்சியளித்த பின்னர் அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்லலாம். அதன்பிறகு அமெரிக்க தொழிலாளர்கள் இந்த வேலைகளுக்கு பொறுப்பேற்பார்கள்.

நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு கப்பல்கள் அல்லது செமி கண்டக்டர்களை உருவாக்கவில்லை. எச்-1பி விசா திட்டத்துக்கான ட்ரம்ப்பின் புதிய அணுகுமுறை, முக்கியமான தொழில்களை அமெரிக்காவுக்கு திருப்பி கொண்டு வருவதற்கும், இறக்குமதிகளை நம்பியிருப்பதைக் குறைப்பதற்குமான முயற்சி. அதிபர் 2,000 டாலர் டிவிடெண்ட் வழங்குவதாக சொல்லியுள்ளார். இது வலுவான வர்த்தகக் கொள்கையின் நன்மைகளை குடும்பங்கள் உணர வைக்கும் செயல்.” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply