அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: ஈரான் உயர்மட்டக் குழு பாகிஸ்தானை அடைந்தது!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்காவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக ஈரானின் உயர்மட்டக் குழு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்தது.

ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) தலைமையிலான 71 பேர் கொண்ட இந்த தூதுக்குழுவில், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் முக்கிய தொழில்நுட்பக் குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.

இஸ்லாமாபாத்தில் உள்ள நூர் கான் விமான தளத்தில் இவர்களுக்கு பாகிஸ்தான் அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த “மேக் ஆர் பிரேக்” (Make-or-Break) பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் முன்னின்று நடத்துகிறது.

லெபனானில் போர் நிறுத்தம் மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் போன்ற நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே முறையான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர். “ஈரான் நேர்மையுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால் நாங்கள் ஒத்துழைக்கத் தயார்” என அவர் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக நிலவும் மோதல்களுக்குப் பிறகு, ஒரு நிரந்தர போர் நிறுத்தத்தை எட்டும் நோக்கில் நடைபெறவிருக்கும் இந்தச் சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நன்றி

Leave a Reply