அமெரிக்கா வெளியிட்ட போதைப்பொருள் பட்டியலில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றன!

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காங்கிரஸில் சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பட்டியலில் மொத்தம் 23 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், போலிவியா, பர்மா (மியான்மார்), கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிக்கன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், குவாட்டிமாலா, ஹைட்டி, ஹொண்டூராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ,நிகராகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு, வெனிசுவேலா, சீனா ஆகிய நாடுகள் அடங்கிய பட்டியலையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

இந்த பட்டியல் “Major Drug Transit or Illicit Drug Producing Countries” என அழைக்கப்படுகிறது.

இதில் இடம் பெறுவது, அந்த நாடு நேரடியாக போதைப்பொருள் தயாரிக்கிறது என்பதல்ல, சில நேரங்களில் அவை கடத்தலுக்கு வழித்தடமாக பயன்படுவதையும் குறிக்கிறது.

அதே நேரத்தில், போதைப்பொருள் தடுப்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்காத நாடுகளை அமெரிக்கா “failed demonstrably” என்ற தனி பிரிவில் வகைப்படுத்தியுள்ளது.

அந்தப் பட்டியலில் வெனிசுவேலா, பர்மா (மியான்மார்), மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே உள்ளன.

இந்தியாவின் பெயர் முதன்மைப்பட்டியலில் இடம்பெற்றாலும், அது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தோல்வியடைந்த நாடாக குற்றம் சாட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply