அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்​திக்க 30 நிமிடம் காத்​திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் | Pakistan Prime Minister Sharif waited 30 minutes to meet US President Trump

வாஷிங்​டன்: பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் நேற்​று​ முன்​தினம் அமெரிக்கா வந்​தடைந்​தனர். இரு​வரும் தலைநகர் வாஷிங்​டனில் வெள்ளை மாளி​கைக்கு நேற்​று​முன்​தினம் மாலை 4.52 மணிக்கு சென்​றனர். அப்​போது அதிபர் ட்ரம்ப் பல்​வேறு அலு​வல்​களில் ஈடு​பட்​டிருந்​தார்.

அவரை சந்​திப்​ப​தற்​காக ஷெபாஸ் ஷெரீப்​பும், அசிம் முனிரும் சுமார் 30 நிமிடத்​துக்கு மேல் காத்​திருந்​தனர். அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்​சிகளை முடித்​துக் கொண்டு வந்​தார். பின்​னர் பிரதமர் ஷெபாஸ், ராணுவ தளபதி அசிம் ஆகியோரை தனது ஓவல் அலு​வல​கத்​தில் அதிபர் ட்ரம்ப் சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார்.

இந்​தச் சந்​திப்பு முடிந்த பின்​னர் மாலை 6.18 மணிக்கு ஷெபாஸ், அசிம் இரு​வரும் காரில் புறப்​பட்டு சென்​றனர்.

இந்​தச் சந்​திப்​புக்கு முன்​ன​தாக செய்​தி​யாளர்​களை சந்​தித்த அதிபர் ட்ரம்ப், “பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் இரு​வரும் சிறந்த தலை​வர்​கள்” என்று கூறி​னார்.

நன்றி

Leave a Reply