அமெரிக்க ஓபன்; டேனியல் மெட்வெடேவுக்கு 42,500 டொலர் அபராதம்!

அமெரிக்க ஓபனில் புதன்கிழமை (27) டேனியல் மெட்வெடேவ் (Daniil Medvedev) மொத்தம் 42,500 டொலர்கள் அபராத்தினை எதிர்கொண்டார்.

இது அவரது $110,000 போட்டி பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.

அமெரிக்க ஓபனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் ரஷ்ய நட்சத்திரம் மெட்வெடேவ் தனது முதல் சுற்றில் பெஞ்சமின் பொன்ஸியுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் அவர் 3-6, 5-7, 7-6 (7-5), 6-0, 4-6 என்ற செட்களில் தோல்வியுற்றார்.

முதல் சுற்றிலேயே வெளியேறிய விரக்தியில் தனது டென்னிஸ் ரொக்கெட்டை (டென்னிஸ் மட்டை) உடையும் வரை ஓங்கி ஓங்கி அடித்தார்.

சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலான நிலையில் பலரும் அவரது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

இதனதால், கிராண்ட்ஸ்லாம் விதிகளின்படி, மெட்வெடேவ் விளையாட்டுத் திறமையற்ற நடத்தைக்காக $30,000 அபராதமும், ஏனைய நடத்தைகளுக்காக $12,500 அபராதமும் பெற்றார்.

 

நன்றி

Leave a Reply