அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று (06) நடைபெற்றிருந்த நிலையில் கனடாவின் ஆகரை வீழ்த்தி இத்தாலியின் ஜொனிக் சின்னர் ( Jonic Cinner) இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று அசத்தினார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஜொனிக் சின்னர் மற்றும் கனடாவின் ஆகர் ஆகியோர் பலப்பரீட்சை நடாத்தினார்கள்.
நீண்ட நேரம் நீடித்த குறித்த போட்டியில் இத்தாலியின் சின்னர் வெற்றிப்பெற்று அசத்தினார்.
முதல் செட் ஆட்டத்தை 6-1 என இலகுவாக கைப்பற்றிய சின்னர். இரண்டாவது செட் ஆட்டத்தில் தோல்வியை தழுவினார்.
சிறப்பாக செயற்பட்ட கனடாவின் ஆகர் 6-3 என கைப்பற்றி அசத்தினார். பின்னர் 3வது செட் ஆட்டம் தொடங்கிய நிலையில் அந்த செட்டை 6-3 என சின்னர் தனதாக்கி பதிலடி கொடுத்து அசத்தினார்.
பின்னர் தீர்க்கமான 4வது செட் ஆட்டம் தொடங்கியது. இதிலும் திறம்பட செயற்ப்பட்ட ஜொனிக் சின்னர் (Jonic Cinner) குறித்த செட் ஆட்டத்தை 6-4 என கைப்பற்றி 6-1,3-6,6-3,6-4 என கைப்பற்றி அசத்தியதுடன் இரண்டாவது வீரராக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று அசத்தினார்.
இந்நிலையில் நாளை (07) நடைபெறும் இறுதிப்போட்டியில் அல்கரஸ் மற்றும் ஜொனிக் சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடாத்தவுள்ளனர்.