அமெரிக்க வரிகளுக்கு மத்தியில் ஜெய்சங்கரின் ரஷ்ய அணுகுமுறை

இந்தியாவும் ரஷ்யாவும் சிக்கலான புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ள ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான அணுகுமுறையைக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் புதன்கிழமை (20) தெரிவித்தார்.

ரஷ்யாவின் மசகு எண்ணெய் வாங்குவது தொடர்பாக வொஷிங்டனுடனான புது டெல்லியின் உறவுகளில் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

மொஸ்கோவில் ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் உடனான சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தனது உரையில் வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய நிறுவனங்கள் இந்தியப் பங்காளிகளுடன் “இன்னும் தீவிரமாக” பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களின் மீதான வரிகளை இரட்டிப்பாக்கி 50 சதவீதமாக உயர்த்திய பின்னர், இந்தியா ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீத கூடுதல் வரிகள் உட்பட, புதுடெல்லிக்கும், வொஷிங்டனுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட சரிவின் பின்னணியில் இந்தக் கருத்துக்கள் வந்தன.

Image

வெளிவிவகார அமைச்சர் செவ்வாய்க்கிழமை (19) மூன்று நாள் பயணமாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜெய்சங்கர்-மந்துரோவ் பேச்சுவார்த்தைகள் இந்தியா-ரஷ்யா வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் (IRIGC-TEC) கட்டமைப்பின் கீழ் நடைபெற்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா-ரஷ்யா வர்த்தகம் ஐந்து மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

2021 இல் 13 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2024-25 இல் 68 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

இதற்கு பெரும்பாலும் இந்திய ரஷ்ய ஹைட்ரோகார்பன் இறக்குமதியின் பின்னணியில் உள்ளது.

புது டெல்லியல் உள்ள ரஷ்ய தூதரகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை 700 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

நன்றி

Leave a Reply