அரசாங்கத்தால் இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளது

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரே கையெழுத்தால் ஒரே அடியில் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. ஆனால் இதுவரை எந்தப் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கத்தால் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத நிலையில், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்க்கட்சி முன்வைக்கும்போது அதைத் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் பெரும்  திறமையாக அமைந்து காணப்படுகின்றன. அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாராக இல்லை. மக்கள் பிரச்சினைகளை ஆளும் தரப்பு சபையில் முன்வைப்பதும் இல்லை. சபை அமர்வில் நாம் மக்களின் இத்தகைய பிரச்சினைகளை முன்வைக்கும்போது, ​​ஒலிவாங்கிகளை துண்டிக்கின்கனர். அவை நிலையியற் கட்டளைகளுக்கு புறம்பானவை என்றும் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் இவ்வாறு நடந்து கொண்டாலும், எதிர்க்கட்சி எப்படியாவது மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்து பதில்களைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அநுராதபுரம் விலச்சிய பி்ரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தற்சமயம் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளும்  அல்லது நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஆளும் தரப்பினர் பிரதேச மக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மக்கள் படும் வலியையும் துன்பத்தையும் இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளாவிட்டாலும், அவர்களின் வலியையும் துன்பத்தையும் நாம் புரிந்து கொண்டுள்ளோம். மக்களுக்கு நாம் ஏதாவது செய்யும்போது, ​​பொருட்களை விநியோகிக்கிறோம், நிவாரணங்களை விநியோகிக்கிறோம், அதை பகிர்ந்தளிக்கிறோம், இதை பகிர்ந்தளிக்கிறோம் என பகிர்ந்தளிக்கும் அரசியலில் ஈடுபடுகிறோம் என்று நம்மைப் பார்த்து கேலி செய்தனர். அவ்வாறு சொல்பவர்களுக்கு அரசியல் செயல்பாட்டின் பரந்த அர்த்தம் புரியவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. அரசியல் என்பது நாட்டுக்கு சேவை செய்யும் விடயமாகையால், எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் இவற்றை நிறுத்த மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply