அரசியலமைப்பு நீதிமன்றினால் தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்!

தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (29) பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை (Paetongtarn Shinawatra) விதிமுறை மீறலுக்காக பதவி நீக்கம் செய்தது.

கம்போடிய அரசியல்வாதி ஹன் சென்னுடனான தொலைபேசி அழைப்பில் விதிமுறைகளை மீறியதற்காக பேடோங்டார்ன் குற்றவாளி எனக் கண்டறிந்ததை அடுத்து நீதிமன்றம் அவரை பணிநீக்கம் செய்தது.

கசிந்த அவர்களின் உரையாடலில், அவர் முன்னாள் கம்போடிய ஜனாதிபதியை ஆதரிப்பது போல் தோன்றியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பியூ தாய் கட்சியைச் சேர்ந்த இரண்டாவது பிரதமராக இவர் மாறியுள்ளார்.

அதேநேரம், தாய்லாந்தின் இளைய பிரதமராக இருந்த பேடோங்டர்ன், நாட்டின் உயர்ட்டத்தினருக்கு இடையே இரண்டு தசாப்தங்களாக அதிகாரத்திற்கான கொந்தளிப்பான போராட்டத்தில் இராணுவம் அல்லது நீதித்துறையால் பதவி நீக்கப்பட்ட பில்லியனர் ஷினவத்ரா குடும்பத்தைச் சேர்ந்த அல்லது அவர்களின் ஆதவினை பெற்ற ஆறாவது பிரதமர் ஆவார்.

ஜூன் மாதம் கசிந்த தொலைபேசி அழைப்பின் மூலம் பேடோங்டார்ன் விதிமுறைகளை மீறியதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

அப்போது, ​​இரு நாடுகளும் ஆயுதமேந்திய எல்லை மோதலின் விளிம்பில் இருந்தபோது.

இந்த முடிவு, புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்ந்தெடுப்பதற்கு வழி வகுக்கிறது.

 

நன்றி

Leave a Reply