ஆக்ஸ்போர்ட்டில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை | Chief Minister Stalin pays homage at GU Pope grave in Oxford

சென்னை: “ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா. அங்குள்ள ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்.” என்று முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “ஜி.யு.போப். 19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ் மேல் தீராக் காதல் கொண்டார்.

தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார். ஆக்ஸ்போர்ட் அறிவாலயத்தில் பேராசிரியராகத் தமிழ்த் தொண்டாற்றினார்.

ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா. அங்குள்ள ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply