அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தேர்வுக் குழு, 2025 ஆசியக் கிண்ணத்துக்கான தேசிய அணியை இன்று (19) அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட இந்த அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், இந்த அணியில் ஷுப்மான் கில்லை நியமித்து அனைத்து ஊகங்களுக்கும் BCCI முற்றுப்புள்ளி வைத்தது.
பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் இறுதி மூன்று இருதரப்பு டி20 போட்டிகளில் எதிலும் இடம்பெறாத கில், இங்கிலாந்தில் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தலைவராகவும், துடுப்பாட்ட வீரராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.
கில் 75 சராசரியாக 754 ஓட்டங்கள் எடுத்தார்.
அதேநேரம் 25 வயதான அவர் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான ஆசியக் கிண்ண அணியின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் ஜஸ்பிரித் பும்ராவும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
எனினும், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை.
ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடாத ரிங்கு சிங் அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஜெய்ஸ்வால் ஐந்து மேலதிக வீரர்களில் ஒருவர்.
ஆசியக் கிண்ணத்துக்கான இந்திய அணி விபரம்:
சூர்யகுமார் யாதவ் (தலைவர்), ஷுப்மான் கில் (துணைத் தலைவர்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்த்திக் பாண்டியா, ஷிவம் டூபே, அக்ஸர் படேல், ஜிதேஷ் சர்மா
(விக்கெட் காப்பாளர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருன் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் காப்பாளர்), ஹர்சித் ரானா, ரிங்கு சிங்
மேலதிக வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வொஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்