188
காசா நகருக்குள் இஸ்ரேலிய படைகள் நுழைந்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கடலோரமாக கால்நடையாக, தங்கள் குழந்தைகள், உடைமைகளை எடுத்துக் கொண்டு பிராந்தியத்தை விட்டு வெளியேறிவருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
காசா நகரின் வடக்குப் பகுதியில் தனது ஆயுதங்கள், இராணுவ வாகனங்களை இஸ்ரேல் கொண்டுள்ள நிலையில், தெற்கு நோக்கி மக்கள் வெளியேறி வருகின்றனர். காசாவில் ஆறு லட்சத்துக்கும் அதிகாமானோர் இருக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பை அடுத்து , ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கடலோரமாக வெளியேறுகின்றனர் என தெரிவித்துள்ளது.